சிங்கள-தேரவாத பௌத்த மேலாண்மை நிலைநாட்டுகைக்கு, (NSDIP) உருவாக்கத்திற்கான அறைகூவல்
Monday, 10 October 2005
--------------------------------------------------------------------------------
தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களது நிலை போலவே, புலனாய்வும், இராணுவ விவகாரங்களும், சங்குவேலிச் சாத்தனுக்கு முற்றிலும் புதிதானவை. ஆனால், அண்மையில் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக இந்த இணையத்தளத்தில் சாத்தன் எழுதியிருந்த புலனாய்வுக் (?) கட்டுரையானது, தென்னிலங்கையிலும், வெளி நாடுகளிலும் ஏற்படுத்தியிருந்த தாக்கங்கள், சாத்தனைத் தன்னையும் புலனாய்வாளானாகவும், இராணுவ விவகாரங்களைச் சிறிது தெரிந்தவன் ஆகவும் கருதத் தூண்டியுள்ளது என்ற உண்மையைச் சாத்தனுக்கு வாசகர்களிடமிருந்து மறைக்க முடியாது செய்கிறது.
தமிழ்த் தேசத்தினதும், சிங்கள தேசத்தினதும் புலனாய்வு, மற்றும் இராணுவ விவகாரங்கள் தொடர்பான கட்டுரைகளைத் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களில் எழுதுகிறவர்கள் இராணுவ விஞ்ஞானத்தைக் கற்வர்களா? இல்லையே? அவர்களும் சாத்தனைப் போன்றவர்களாக இருக்கையில், ஏன் சாத்தன் தன்னைப் புலனாய்வு, இராணுவ தந்திரோபாய நிபுணனாகக் கருத முடியாது, கருதக்கூடாது?
எதுவிதத்திலும், B. B. C தமிழோசை, மற்றும் தமிழ் ஊடகங்கள் ஒரு சிலரை இராணுவ வல்லுனர் எனக் குறிப்பிட்டு வந்ததைப் போல் சாத்தனையும் குறிப்பிட வைப்பதாயின், சாத்தனும் அவர்களைப்போல் சிலவற்றைப் பற்றிப் புலம்பிச் சகலரையும் குழப்ப வேண்டியுள்ளது என்பது, சாத்தனுக்கு நன்றாகத் விளங்குகிறது.
இலங்கையின் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களைப் பொறுத்தமட்டிலும், பூகோள அரசியல் ஆராய்வாளர்களைப் பொறுத்தமட்டிலும் காணப்படும் பெரும் குறைபாடு என்னவென்றால், அவர்களுக்கு இராணுவ விஞ்ஞானத்தில் எந்தவித அறிவும் இல்லாதமையாகும்.
இந்த ஊடகவியலாளர்களும், ஆய்வாளர்களும் இந்த அப்பட்டமான உண்மையை ஏற்க மறுப்பர். ஆனால், அதுதான் மறுக்கப்படமுடியாத, மறைக்கப்படமுடியாத உண்மையாகும்.
ஒருபுறத்தில், இந்தத் துறை தொடர்பான அடிப்படை அறிவை அவர்களுக்கு வளர்த்துக்கொள்ள, எவரும் திட்டமிட்ட விதத்தில் உதவாதமையாலும், ஊடகவியலாளர்களுக்கான கல்லூரிகளில் இராணுவ விஞ்ஞான அடிப்படைகளும், பூகோள அரசியல், தந்திரோபாய ஆய்வுகள் என்பவை பற்றிக் கற்பிக்கப்படாதமையாலும், அவர்கள் நூல்கள், இணையத்தளங்களுடாகத் தமது இராணுவ விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொள்ளாதமையாலும், மறுபுறத்தில், பூகோள அரசியல், மற்றும் ஆய்வுகளுக்கு விஞ்ஞானம், தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு, பொருளாதாரம், வரலாறுகள், மொழிகள், சமயங்கள், கலாசாரம், சர்வதேச அமைப்புக்கள், இராஜதந்திரம், பூகோளவியல், இயற்கை வளங்கள், சக்தி, … எனப் பல்வேறு பட்ட துறைகளிலும் போதிய அறிவு இருக்கவேண்டும் என்பதை ஊடகவியலாளர்களும், ஆராய்வாளர்களும் ஏற்காத நிலையாலும், அவர்களால் பூகோள அரசியல், மற்றும் புலனாய்வு கட்டுரைகள் என எழுதப்படுபவைகள், உண்மையில், விஞ்ஞானத் தன்மையற்றவையாகவும், பிழையான முடிவுகளுக்கு அவர்களை இட்டுச் செல்பவையாகவும்தான் காணப்படுகின்றன. இது, சாதாரண மக்களைக் கற்பனாவாதத்தினுள் வீழ்த்தி, அரசியல் ஏமாற்றுக்களை நடாத்த, ஆளும் வர்க்கங்களுக்குப் பெரிதும் உதவிவருகிறது.
இது மிகவும் துன்பமான விடயமாகும்.
எதுவிதத்திலும், இனி யார்தான் என்ன கூறினாலும், தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களில் இராணுவ தந்திரோபாய, மற்றும் புலனாய்வுக் கட்டுரைகளை எழுதி, விவாதித்து வருபவர்கள்போலும், இந்த இணையத் தளத்தில் புலனாய்வுக் கட்டுரைகளை எழுதும் காத்தனையும், பூத்தானையும் போலவும்@ இராணுவ விடயங்கள் தொடர்பான கட்டுரைகளை எழுதும் கொயிலாக்கண்டி வசந்தன், ஏனையவர்கள் போலவும், சாத்தனும் புலனாய்வு, இராணுவ தந்திரோபாய விடயங்கள் பற்றியும், பூகோள அரசியல் பற்றியும் எழுதவுள்ளான்!
அவற்றைப் படித்து, ஆராய்ந்து, விவாதித்து, உங்களது கருத்துக்களை எமது இணையத்தளத்தினருக்கு அறியத்தரவும்.
இலங்கையின் இன்றைய பிரதமராக இருந்து வருபவரும், ஜனாதிபதி வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைப் பிரச்சனைக்கு ஒற்றையாட்சியின் கீழ்த்தான் தீர்வு எனவும்@ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைந்த பின்னர்த்தான் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை, … என்ற நிபந்தனைகளை முன்வைக்கும் JVP, JHU என்ற கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து செயற்பட ஆரம்பித்திருக்கும் நிலையில், இராணுவ விவகாரங்கள் தொடர்பாகச் சிறீ லங்கா இராணுவத்திலிருந்தவர்களால் அண்மைக் காலத்திலிருந்து கட்டுரைகள் தென்னிலங்கையின் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இலங்கை இராணுவம் சார்ந்தவர்களினால், இன்று வரை கட்டுரைகள் பொது மக்களுக்கான பத்திரிகைகளில் எழுதப்படவில்லை. சேவையிலிருக்கும் இராணுவத்தினர் அப்படியான கட்டுரைகளை எழுதுவதையும், சட்டம் அனுமதிக்க மாட்டாது.
படைகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களே, இராணுவ சம்பந்த கட்டுரைகளை எழுத முடியும். மேலும், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை உருவாக்கக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்ட கட்டுரைகளை இவர்களும் பொது மக்களுக்கென எழுத முடியாது.
ஆனால், அண்மைக் காலத்தில், இராணுவ சம்பந்த விடயங்கள் தொடர்பான இரண்டு கட்டுரைகள் அரச கட்டுப்பாட்டிலுள்ள ஆங்கிலப் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.
முதலாவது கட்டுரையானது, Sunday Observer என்ற பத்திரிகையில் Stalking the target ‘LK’ என்ற தலைப்பில் 04.09.2005 அன்று வெளியாகியிருந்தது. இந்தக் கட்டுரையை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாது, எழுதியவரை A Retired Senior Army Infantry Officer என மாத்திரமே, பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுரையானது கதிர்காமர் கொலை செய்யப்பட்டது தொடர்பாகப் பத்திரிகைகளில் முன்னர் வெளியான செய்திகள், ஆய்வுகள், பயன்படுத்தப்பட்ட ஆயுதம், சாதனங்கள், கொலை செய்யப்பட்ட முறை,… போன்றவைகளை இராணுவ ரீதியாக ஆராய்ந்துள்ளது.
இவைகளை ஆராய்ந்து, இறுதியில், சிங்கள தேசம் அரசியல் -- இராணுவ ரீதியாக எதனைச் செய்வதன்மூலம் இலங்கையை ஒற்றையாட்சியின் கீழ், சிங்கள – பௌத்த மேலாண்மையின் கீழ் வைக்க முடியும் என்பது பற்றி அக்கட்டுரை பேசியுள்ளது.
இக்கட்டுரையில் இறுதியாகப் பேசப்பட்ட விடயம் தொடர்பாக, சாதாரணமானவர்களுக்குப் போதிய விளக்கம் ஏற்பட்டிருக்க முடியாது என்ற அடிப்படையில், Operation ‘Restore Peace’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையானது, 18.09.2005ஆம் திகதியில் Sunday Observer இல் வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு கட்டுரைகளும், சிங்கள தேசத்தின் சிங்கள – தேரவாத பௌத்த மேலாண்மைவாதிகளின் குறிக்கோள்களையும், கதிர்காமரின் கொலையின் பின்னரான அவர்களது சிந்தனையையும் அறிந்து கொள்ளப் பெரிதும் உதவும் அதேவேளையில், புலனாய்வு, இராணுவ விவகாரங்கள் தொடர்பாகத் தமது அறிவை வளர்க்க விரும்புகிறவர்கள் ஆராயவும் உதவமுடியும்.
இதில் சுவாரிஸ்யமானது என்னவென்றால், இன்று நீதி மன்றத்தினாலும், பொலீசாராலும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் விடயம் என்ற ரீதியில், கதிர்காமரின் கொலை தொடர்பான technical விடயங்களை முதலாவது கட்டுரையில் எழுதும்போது தனது பெயரைக் குறிப்பிடாது தவிர்த்துக் கொண்ட அந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி, இரண்டாவது கட்டுரையில் தனது பெயரை Lt. Colonel Susantha Seneviratne எனக் குறிப்பிட்டிருப்பமையாகும்!
இந்த இரண்டு கட்டுரைகளையும் ஆராய்ந்து விவாதிப்பது, ஒருவர் தனது புலனாய்வு, இராணுவ சம்பந்த அறிவையும், ஆராயும் வல்லமையையும் உயர்த்திக் கொள்ளவும், சிங்கள தேசத்தின் அரசியல் போக்குப் பற்றிச் சரியாக அறியவும் உதவுமாகையால், அவை பற்றி இங்கு சுருக்கமாக ஆராய்வோம்.
எதுவிதத்திலும், சில வாரங்களுக்கு முன்னர் கதிர்காமர் கொலை தொடர்பாக இந்த இணையத்தளத்தில் சாத்தனால் எழுதப்பட்ட புலனாய்வுக் கட்டுரையை முதலில் படித்து வைத்திருப்பது, இங்கு ஆராயப்படவுள்ளவைகளைச் சுலபமாக விளங்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். ஆகவே, அதை முதலில் படித்துக்கொள்ளுங்கள். அதைப் படித்து முடித்துவிட்டீர்களாயின், முதலில் நாம் Lt. Colonel Susantha Seneviratne வின் முதலாவது கட்டுரையை ஆராய்வோம்.
தனது கட்டுரையின் ஆரம்பத்தில், கதிர்காமர் என்ன ஆயுதத்தினால் எப்படிச் சுடப்பட்டார் என்பது பற்றி, லெப்ரினன் கேணல் ஆராய்கின்றார்.
அந்தக் கட்டுரை பின்வருமாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளது:
The assassin, who killed the Minister, is believed to be a ‘sniper’ according to politicians, security forces and Police, media and public opinion. The perpetrator had removed the weapon used for this crime, leaving behind few other items such as 40mm GL and its 02X live and 01X misfired cartridges and a tripod.
Therefore, it is difficult to determine precisely the exact type of weapon used in this connection. The on going forensic investigation would, sometimes be able to reveal facts regarding this from the evidence collected at the crime scene.
இதில் கொலையாளிகளால் விட்டுச் செல்லப்பட்டவைகளாகக் கூறப்படுவதில், ஊடகங்கள் a tripod எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே, தென்னிலங்கையின் இந்த இராணுவ அதிகாரியான கட்டுரையாளரும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், a tripod எனக் கூறுவது, குழப்பத்தினைத்தான் உருவாக்கமுடியும். சாதாரண பயன்பாட்டில், Tripod என்பது மூன்று கால்களை உடைய ஒரு தாங்கியைக் குறிக்கும். ஆனால், இராணுவ சம்பந்த பயன்பாட்டில், அது Medium Mechine guns இனை நிலை நிறுத்திச் சுடுவதற்குப் பயன்படுத்துவதாகும்.
இராணுவப் பயன்பாட்டில், Bipod என்பதும் உள்ளது. இது, இரு கால்களையுடைய சிறிய தாங்கி ஆகும். முழுத் தன்னியக்கமாகச் (Full - automatic) சுடக் கூடிய ரைபிள்களினதும், Light Machine guns இனதும் குழல் நுனியின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் Bipod ஆனது, இந்த ஆயுதங்களை நிலத்தில் நிலை நிறுத்திச் சுட உதவும். இஸ்ரேலிய கலீல் (Galil) தாக்கு - ரைபிளில் (Assault – Rifle), Bipod எப்போதும் பொருத்தப்பட்டே பெரும்பாலும் காணப்படும்.
இந்தநிலையில், a tripod உம் தளையசிங்கத்தின் வீட்டு மேல் அறையில் காணப்பட்டது எனப் பத்திரிகைகள் எழுதினால், கதிர்காமர் இயந்திரத் துப்பாக்கியால் (Machine Gun) Full - automatic firing மூலம் சுடப்பட்டார் என்ற விளக்கம்தான், இலக்கினை ஒரு புள்ளியில்தாக்கும் ஆயுதங்கள் (the point target weapons) பற்றித் தெரிந்திருந்தவருக்கு ஏற்படும்.
நல்லவேளை, ஊடகவியலாளர்கள் a tripod என எதனைக் குறிப்பிட்டிருந்தனர் என்பதை, சில பத்திரிகைகளிலும், ரெலிவிஷனிலும் காட்டப்பட்ட படங்களுடாகச் சரியாக விளங்கிக்கொள்ள முடிந்தது!
எதுவிதத்திலும், சாத்தன் போன்ற சில்லறை “ புலனாய்வுக்காரர்கள், “ “ இராணுவ நிபுணர்கள், “ தளையசங்கத்தின் வீட்டில் a tripod உம் கைவிடப்படப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறினால், அது பறவாயில்லை.
ஆனால், ஒரு நாட்டின் படையினது Lt. Colonel ஆக இருந்தவரால் அப்படிக் குறிப்பிட்டிருப்பதுதான், சாத்தனுக்கு ஒரு மாதிரியாக உள்ளது.
தென்னிலங்கையின் முன்னைய இராணுவ அதிகாரி, தனது கட்டுரையில், தொடர்ந்து பின்வருமாறு கூறியுள்ளார்:
Yet the identification of the type of weapon used from the pellets found in the body of the slain minister, if any or the same found in a wall/any object after piercing his body may be somewhat impossible as there were no empty cases left behind by the assailants.
கட்டுரையாளரால் இங்கு கூறப்பட்டிருப்பவைகள், குழப்பத்தினை ஏற்படுத்துபவையாகவே உள்ளன.
இராணுவ பயன்பாட்டிற்கான இலக்கினை ஒரு புள்ளியில் தாக்கும் ஆயுதங்களைப் பொறுத்தமட்டில், 7.62mm விட்டத்தைக் கொண்ட குண்டுகளும், 5.56அஅ விட்டத்தைக் கொண்ட குண்டுகளும், சற்று நீளமாகவும், குறிப்பிட்ட சில உருவ அமைப்புக்களைக் கொண்டவையாகவுமே, உலகின் நாடுகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த அளவுகளைக் கொண்ட குண்டுகளையுடைய தோட்டாக்கள் Cartridges), Rifles, Light Machine guns. Machine guns என்பவைகளால்தான் சுடப்படுகின்றன.
ஆனால், 9அஅ விட்டக் குண்டினையுடைய தோட்டாக்கள் Pistol, Machine Pistol, Sub Machine gun என்ற வகையான ஆயுதங்களில் சுடப்படுகின்றன.
இவற்றைவிடஇ AK – 78 பிரித்தானியப் படைகளின் Standard Infantry weapon உம், சற்று வேறுபட்ட சிறிய விட்டங்களையுடைய குண்டுகளைச் சுடுகின்றன.
இதைவிட, வௌவேறு பிரத்தியேக தேவைக்கான ஆயுதங்களால், வௌவேறு விட்டங்களை உடைய குண்டுகள் சுடப்படுகின்றன.
இந்தநிலையில், சுடப்பட்ட குண்டின் விட்டம், மற்றும் குண்டின் உருவ அமைப்பு போன்றவைகளை வைத்து, Rifle, Light Machine gun, Machine gun என்பவை பயன்படுத்தப்பட்டுள்ளதா, அல்லது Pistol, Machine Pistol, Sub Machine gun என்பவை பயன்படுத்தப்பட்டுள்ளதா, அல்லது வேறு இரக ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறியமுடியும்.
ஆனால், குறிப்பாக எந்த நாட்டின், குறிப்பாக எந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை, குண்டின் விட்டம், உருவ அமைப்பு என்பவைகளை மாத்திரம் வைத்து அடையாளங்காண முடியாது.
குறிப்பிட்ட கட்டுரையை எழுதயுள்ள ஓய்வு பெற்ற இந்த இராணுவ அதிகாரி, சாதாரண மக்களுக்கு ஏன் இராணுவ விடயங்களை அதிகம் தெரியப்படுத்தவேண்டும் எனக் கருதி, தனது கட்டுரையைக் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் எழுதியுள்ளாரோ தெரியவில்லை.
ஆனால், அவர் தொடர்ந்து கூறியிருப்பவைகள், இது தொடர்பாக ஒருவித ஐயப்பாட்டினைத்தான் உருவாக்குகிறது. அவர் தொடர்ந்து பின்னவருமாறு கூறியுள்ளார்:
Even if the type of empty cases are recovered, it might not lead to identifying the type of weapon used, because there are many assorted weapons which can fire with the same type of ammunition.
இது, உண்மையில, குழப்பத்தினையே ஒருவருக்கு ஏற்படுத்தும்.
சுடப்பட்ட தோட்டாவின் வெற்று உறை கண்டெடுக்கப்பட்டால், அந்தத் தோட்டாவினது குண்டின் விட்டம், தோட்டா உறையினது நீளம் என்பவைகளை, அளந்து அறிந்து கொள்ளமுடியும். ஆனால், சிறிது காலம் பல்வேறு ஆயுதங்களைக் கையாண்டு அனுபவமுள்ள ஒருவர், தோட்டாவின் வெற்று உறையைப் பார்த்தே, அது குறிப்பாக என்ன அளவுகளுடைய தோட்டா என்பதைக் கூறிவிடமுடியும்.
அது 7.62mm x 39 mm ஆயின், அத்தோட்டக்களைச் சுடும் ரைபிள்கள் Rifles), (Light Machine guns), இயந்திரத் துப்பாக்கிகள் (Machine guns) குறிப்பிட்ட நாடுகளால் உற்பத்தி செய்யப்பட்டவையாகவே உள்ளன.
7.62mm x 51mm அளவுகளையுடைய தோட்டாக்களை 7.62 mm NATO என்பர். இவைகள் பல நாடுகளால் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களில்
பயன்படுத்தப்படும்போதும், அவை ரைபிள்கள் (Rifles), (Light Machine guns) இயந்திரத் துப்பாக்கிகள் (Macine guns) ஆக மாத்திரமே இருக்கமுடியும். இந்தத் தோட்டாக்களைச் சுடும் ஆயுதங்கள் Pistol, Machine Pistol, Sub Machine gun ஆக இருக்கமுடியாது.
ஒரு புள்ளிய